இலங்கையை அண்மித்த பகுதியில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை
இலங்கையை அண்மித்த பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்னும் நீடிப்பதாக வானிலை அவதான மையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இன்றைய தினத்திற்கான காலநிலை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும், மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
வேறு சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழையை எதிர்பார்க்கலாம்.
இதேவேளை இடியுடன் கூடிய மழையின் போது பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்து கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என கோரியுள்ளது.
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri