இலங்கையின் கிழக்குக் கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்பில் நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம்
குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது இலங்கையின் கிழக்குக் கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்பில் நிலை கொண்டுள்ளது. இத்தொகுதியின் தாக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை நிலைமை எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்றைய தினத்திற்கான வானிலை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
திருகோணமலையில் இருந்து காங்கேசன்துறை ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகளுக்கு மறு அறிவித்தல் வரும் வரையில் கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றானது வடமேற்கிலிருந்து மேற்காக வீசும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்று கிழக்கிலிருந்து வடகிழக்கு அல்லது திசையில் மாறுபடும்.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு (15 - 30) கிலோ மீற்றர் வரை வீசும். திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (60 - 65) கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.
திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகளும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாக இருக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

எழுத்தாளராக வேண்டும் என்று நினைத்த எலக்ட்ரீஷியனின் மகள்.., யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று ஐபிஎஸ் அதிகாரி News Lankasri

இந்த ராசியில் பிறந்தவங்க இறக்கும் வரை பணக்காரர்களாக இருப்பார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan
