தலைமுறைகள் கடந்தும் தொடரும் நினைவுகள்! லண்டனில் மாவீரர் நாள் 2026 நிகழ்வுகள் ஆரம்பம்
தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2026 நினைவேந்தல் நிகழ்வுகள், பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் லண்டன் எக்ஷல் மண்டபத்தில் ஆரம்பமாகியுள்ளன.
பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தென்கிழக்குப் பிராந்திய நீண்டகாலச் செயற்பாட்டாளரான சதாசிவம் ஆனந்தகுமார் பொதுச்சுடரை ஏற்றி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.
2026 நிகழ்வுகள் ஆரம்பம்
தொடர்ந்து, பிரித்தானிய தேசியக் கொடியை தமிழ் இளையோர் பொறுப்பாளர் செல்வி டென்சியா நியூட்டன் அவர்கள் ஏற்றிவைத்தார்.

அதனைத் தொடர்ந்து, தமிழீழ தேசியக் கொடியை பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் துணைப் பொறுப்பாளரும், அனைத்துலகத் தொடர்பகத்தின் மகளிர் அணிப் பொறுப்பாளரும், முன்னாள் சிறுத்தைப் படையணியின் தளபதியுமான திருமதி ஆரபி மணியரசன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
தேசியத் தலைவரின் சிந்தனை வரிகளுடன் நிகழ்வுகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இதேவேளை, மாவீரர்களுக்கான ஈகைச்சுடரை ஏற்றுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் காத்திருக்கின்றனர்.


