இலங்கைக்கு வடகிழக்கில் நிலைக்கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை - அடுத்த 36 மணிநேர வானிலையில் மாற்றம்
இலங்கைக்கு வடகிழக்கே நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை மேலும் நீடிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (12) மாலை 4 மணிக்கு வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
குறைந்த காற்றழுத்தத்தாழ்வு நிலை
அதன்படி, குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை அடுத்த சில நாட்களில் வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தாக்கம் காரணமாக, நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கமைய, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அனுராதபுரம், திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கபில சந்திரசேனவின் இறுதி சத்தியகடதாசி - மகிந்த, நாமலை சிக்கவைக்க சதித்திட்டம்
முதலமைச்சராக இருந்தாலும் இதுதான்... சங்கீதாவின் வளர்ப்புக்கு Royal salute! படுவைரலாகும் வீடியோ Manithan