அடுத்த 36 மணி நேரத்திற்கான வானிலை அறிவிப்பு!
அடுத்த 36 மணி நேரத்திற்கு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை
இடியுடன் கூடிய மழை ஏற்படும் சந்தர்ப்பங்களில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்குதல்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கிழக்கு மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்யமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மீண்டும் காமெடி ரூட்டிற்கு திரும்பும் நடிகர் சந்தானம்... இந்த முறை யாருடைய படம் தெரியுமா? Cineulagam
பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர்.. வைல்டு கார்டு என்ட்ரி நடிகர் அமித் பார்கவ் பற்றி இது தெரியுமா Cineulagam