மழை அனர்த்தம் காரணமாக யாழில் 18 குடும்பங்களைச் சேர்ந்த 64 பேர் பாதிப்பு
கன மழையுடன் கூடிய காற்று காரணமாக யாழில் 18 குடும்பங்களை சேர்ந்த 64 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், வேலணை பிரதேச செயலர் பிரிவில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 4 வீடுகள் பகுதியில் சேதமடைந்துள்ளன.
இரண்டு வீடுகள் சேதம்
உடுவில் பிரதேச செயலர் பிரிவில் 2 குடும்பங்களைச் சேர்ந்த எண்மர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இரண்டு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
சங்கானை பிரதேச செயலர் பிரிவில் 3 குடும்பங்களைச் சேர்ந்த எண்மரும், ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவில் 7 குடும்பங்களைச் சேர்ந்த 27 பேரும், சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த எண்மரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


