நாளை முதல் வடக்கு - கிழக்கு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு
இலங்கைக்கு தெற்கு தென்கிழக்காக மிகப்பரந்த அளவிலான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதாக யாழ்.பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் தலைவர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, முன்னரே குறிப்பிட்டபடி நாளை முதல் ( 28.01.2025) எதிர்வரும் பெ்பரவரி 03ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அறுவடை செயற்பாடுகள்
இதன்படி, நாளை முதல் (28.01.2025) எதிர்வரும் பெப்ரவரி 01ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. எனினும், ஒரு சில பகுதிகளுக்கு மிகக்கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
அதேவேளை எதிர்வரும் பெப்ரவரி 02ஆம் திகதி முதல் வடக்கு மாகாணத்தில் மழை படிப்படியாக குறைவடையும். கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் பெப்ரவரி 04ஆம் திகதி முதல் மழை படிப்படியாக குறைவடையும்.
ஆகவே, விவசாயிகள் இந்த நாட்களைக் கருத்தில் கொண்டு தமது அறுவடை மற்றும் அறுவடைக்கு பிந்திய செயற்பாடுகளை மேற்கொள்வது சிறந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |