யாழில் பட்டப்பகலில் வீட்டினுள் புகுந்து நகை திருட்டு: சந்தேகநபர் தப்பியோட்டம்
யாழ்ப்பாணம் (Jaffna) - திருநெல்வேலி, அரசடி வீதி பகுதியிலுள்ள வீடொன்றில் நகை கொள்ளையிடப்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது இன்று (28) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த பகுதியில் காலை 10 மணியளவில் சென்ற இனந்தெரியாத ஒருவர் சில வீடுகளுக்கு சென்று மின்வாசிப்பாளர் போலவும், முகவரி ஒன்றினை விசாரிப்பது போன்று நடித்துள்ளார்.
பொலிஸாரிடம் முறைப்பாடு
இதனையடுத்து, இறுதியாக பெண் ஒருவர் தனியாக நின்று கொண்டிருந்த வீட்டினுள் நுழைந்து தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளார்.

இந்தநிலையில், குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
நிச்சயதார்த்தம் நின்றுபோனது.. அதிர்ச்சியில் குடும்பம்.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam