வாகன சாரதிகளுக்கு பொலிஸாரின் கடுமையான எச்சரிக்கை
சீரற்ற காலநிலையால் ஏற்படக்கூடிய அனர்த்த நிலைமைகளால் சில வீதிகள் மூடப்படும் அபாயம் உள்ள நிலையில் இது தொடர்பில் வாகன சாரதிகளுக்கு பொலிஸார் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
அதன்படி, பல மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதால், முக்கிய வீதிகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட பாதைகளை பயன்படுத்த முயற்சி
எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், சில வாகன சாரதிகள் தடை செய்யப்பட்ட பாதைகளைப் பயன்படுத்த முயன்றுள்ளனர். எனவே ஆபத்து நிலைமை காரணமாக மூடப்படும் வீதிகளுக்குள் பிரவேசிக்க முயற்சிப்பதை தவிர்க்க வேண்டும்.

தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும். கடுமையான வானிலையின் போது வாகனங்கள் பாதுகாப்பான நிலையில் இருப்பதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக இது வரையில் முப்பதிற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதுடன், பலர் காணாமல்போயுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சக்தி கிடைக்காத துயரத்தில் ஜனனிக்கு ஏற்பட்ட சோகம், அறிவுக்கரசியின் ஆட்டம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam