காலநிலை மாற்றம் தொடர்பான அறிவிப்பு
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 4.00 மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.
மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
இதேவேளை மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஈரானின் வான்பரப்பிற்குள் சுட்டுவீழ்த்தப்பட்ட அமெரிக்காவின் போர் விமானம்! ஒரே பொய்யை கூறுவதாக மறுப்பு
குவைத் முழுவதும் உயர் எச்சரிக்கை நிலை..! பற்றியெரியும் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை - சுட்டுவீழ்த்தப்படும் ஏவுகணைகள்