அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து டலஸ் அழகப்பெரும அதிருப்தி
இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாகும் தகுதி தமக்கு உண்டு என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நாடாளுமன்றில் நடைபெற்ற ஜனாதிபதி தெரிவின் போது பலர் போட்டியிட அஞ்சினர் எனவும், தாமே தைரியமாக முன்வந்து தேர்தலில் போட்டியிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தேர்தலின் போது பல கட்சிகளின் ஆதரவு கிடைக்கப்பெற்றதாகவும் 84 வாக்குகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஜனாதிபதி வேட்பாளர்
அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட முடியும் எனவும் அதற்கான சகல தகுதிகளும் உண்டு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், மேலும் ஜனாதிபதி வேட்பாளர்களை பெயரிட்டு அரசாங்கத்திற்கு சந்தர்ப்பம் வழங்குவதினை செய்யக்கூடாது எனவும், அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்தும் அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பலமான ஒரு அரசின் நேரடி ஆதரவின்றி, தேசிய இன விடுதலை சாத்தியமற்றது! 22 மணி நேரம் முன்
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam