1 மணிக்கு பின்னர் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் காலை வேளையிலும் பல தடவைகள் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த மழைவீழ்ச்சி
மத்திய மற்றும் சப்ரகமுவ வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.





வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri
