அம்பாறையில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுவன்! விசாரணையில் திடீர் திருப்பம்
அம்பாறை - சாய்ந்தமருது பகுதியிலுள்ள மத்ரஸாவில் மர்மமான முறையில் கழுத்து பகுதி நெரிக்கப்பட்டு உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கமைய உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பான சிசிரிவி கமராவின் வன்பொருள் (HARD DISK) மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிசிரிவி கமராவின் சேமிப்பகம்
மத்ரஸா மாணவனின் மரணமானது கொலையா அல்லது தற்கொலையா என்ற சந்தேகத்துடன் புலன் விசாரணை முன்னெடுத்து வரும் சாய்ந்தமருது பொலிஸார் இவ்விடயம் குறித்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சிசிரிவி கமராவின் சேமிப்பகம் வன்பொருள் மீட்கப்பட்டால் உண்மைகள் பல வெளியாகும் என பொலிஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அத்துடன் மாணவனின் மரண விசாரணைக்காக சாய்ந்தமருது பொலிஸாரால் அம்பாறை பொது வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்ட மதரஸா நிர்வாகியாகிய மௌலவி கைது செய்யப்பட்டு மீண்டும் பொலிஸ் நிலையம் ஒன்றின் தடுப்பு காவலில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளார்.
    
    
    
    
    
    
    
    
    
    ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
    
    Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan