மண்சரிவினால் பாதிக்கப்பட்ட வட்டவளை தொடருந்து நிலையத்தை பார்வையிட்ட மஞ்சுள சுரவீரஆரச்சி எம்.பி
வட்டவளை பிரதேசத்தில் பெய்த கடும் மழையைத் தொடருந்து மண்சரிவினால் பாதிக்கப்பட்ட வட்டவளை தொடருந்து நிலையத்தை, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீரஆரச்சி இன்று (27.10.2026) நேரில் சென்று பார்வையிட்டார்.
குறித்த தொடருந்து நிலையத்தின் பிரதான கட்டடத்தின் பின்புறம் அமைந்திருந்த பாரிய மலைப்பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, தொடருந்து நிலையக் கட்டடம் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.
புனரமைக்கும் பொறுப்பு

இதனையடுத்து, சேதமடைந்த தொடருந்து நிலையத்தின் பிரதான கட்டடத்தை முழுமையாக புனரமைக்கும் பொறுப்பு இலங்கை இராணுவத்தின் பொறியியல் படைப்பிரிவிடம் தொடர்ந்து திணைக்களத்தினால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வட்டவளை தொடருந்து நிலையத்தின் சரக்குக் களஞ்சியக் கட்டடத்தைத் தற்காலிக தொடருந்து நிலையமாகப் பயன்படுத்தும் நோக்கில், தொடருந்து திணைக்களத்தின் பொறியியல் பிரிவினால் புனரமைப்புப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.










தேர்தல் முடிய காத்திருக்கும் ட்ரம்ப்... மத்திய கிழக்கில் ரகசியமாகக் குவிக்கப்படும் இராணுவம் News Lankasri
குற்றங்கள் நிரூபணமானால்... தாமஸ் மெர்க்கலுக்கு 12 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனைக்கு வாய்ப்பு News Lankasri