முழு இலங்கைக்கும் சிவப்பு எச்சரிக்கை - வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவசர அறிவுறுத்தல்
வங்காள விரிகுடாவில் நிலவும் வளிமண்டலக் குழப்ப நிலை காரணமாக இலங்கையில் சீரற்ற காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மற்றும் மேல் மாகாணங்களில் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சில இடங்களில் 100 மி.மீ முதல் 150 மி.மீ வரை கடுமையான பலத்த மழை எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படும் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களிலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பாக இருக்குமாறு, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் முழு இலங்கைக்கும் சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை டித்வா புயல் தாக்கத்தின் போது அதாவது கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் பலத்த மழை தொடர்பில் முழு இலங்கைக்கும் சிவப்பு எச்சரிக்கை வழங்கப்பட்டடிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் நெல்லிக்காய்- இந்த உணவுகளுடன் சேர்த்துச் சாப்பிட்டால் இரட்டிப்பு பலன்கள்! Manithan
Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan