மழையும் வெயிலும்! நாட்டில் பல இடங்களில் வேறுபட்ட வானிலை
காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நாட்டின் சில மாவட்டங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மழை
இதன்படி, காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பல இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
அம்பாறை மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயங்களைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வறண்ட வானிலை
நாட்டின் பிற பகுதிகளில் முக்கியமாக வறண்ட வானிலை நிலவுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், பதுளை மாவட்டத்திலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் நிறைந்த வானிலை எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் டிவியை தொடர்ந்து வேறொரு தொலைக்காட்சியின் சீரியலில் கமிட்டாகியுள்ள நடிகை ஷோபனா.. முழு விவரம் Cineulagam
