தொடரும் சீரற்ற காலநிலை: இலங்கையில் மக்களுக்கு எச்சரிக்கையுடன் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக ஆறுகளை அண்டியுள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆறுகளின் நீர்மட்டம்
தொடர் மழை காரணமாக ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதுடன், சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு அனர்த்தங்களும் பதிவாகியுள்ளளன.
இதன்காரணமாக ஆறுகளை அண்டியுள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
ஐ.நாவில் இடம்பிடித்த நீதிபதி இளஞ்செழியன்: பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ள நீதிபதி சரவணராஜாவின் வெளியேற்றம்(Video)
இதேவேளை நாட்டிலுள்ள 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை
கொழும்பு, கண்டி, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, மாத்தறை, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 4.30 வரையில் இந்த எச்சரிக்கை நடைமுறையில் இருக்கும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |