வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழமுக்கம்! விடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழமுக்கம் இன்று (06.05.2023) மேலும் அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக எதிர்வரும் மூன்று நாட்களில் மழைவீழ்ச்சி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதிக மழை வீழ்ச்சி
இதேவேளை நாட்டின் மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் தெற்கு உட்பட பல பிரதேசங்களில் தற்போது மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்சமாக நீர்கொழும்பில் 31.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வரும் அறிவிப்புகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு மீனவ மற்றும் கடற்படை சமூகத்தை வளிமண்டலவியல் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
யாழ் மாவட்டத்தில் மழை வீழ்ச்சி
இன்று காலை 8:30 மணியிலிருந்து 11:30 வரையான மூன்று மணியளங்களில் யாழ் மாவட்டத்தில் 39 தசம் ஒன்பது மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ் மாவட்ட வானிலை அவதான நிலையம் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் கடைமை நேர அதிகாரிக்கு ரீ.பிரதீபன் தெரிவிக்கையில், நேற்று காலை 8:30 மணியிலிருந்து இன்று காலை 8:30 மணிவரை அச்சுவேலிப் பகுதியில் 8.மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் பருத்தித்துறை பகுதியில் 0.6 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கிளிநொச்சி பகுதியில் 0.9 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.