யாழ். பல்கலையில் மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் யாரும் அறியாத அதிர்ச்சி தகவல்கள்
தமிழர்களின் அடையாளமான யாழ்.பல்கலைக்கழகத்திலே நேற்றையதினமும், இன்றையதினமும் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் மிகவும் முக்கியமான பேசுபொருளாக மாறியுள்ளது.
ஆனால், குறித்த சம்பவம் தொடர்பில் அங்கிருந்த பொலிஸாரிடமோ, படைத்தளபதிகளிடமோ பரபரப்பு தன்மை அற்று இருந்ததாக ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்தோடு, மீட்கப்பட்ட ஆயுதங்கள் 2008 அல்லது 2009 ஆண்டு காலப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டு இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கார்த்திகை மாதத்தில் பாதுகாப்பு படையினரின் கெடுபிடிகள் அதிகரிக்கப்படுவது வழமை.இந்தநிலையிலே குறித்த சம்பவம் பாதுகாப்பு படையினரின் கெடுபிடிகளை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் செய்யப்பட்டதா என்கின்ற கேள்வி எழுகின்றது.
மேலும், பல்கலைக்கழகத்தில் மீட்கப்பட்ட துப்பாக்கி பாகங்கள், வயர்கள், T - 56 ரக துப்பாக்கி போன்றவை அண்மைக்காலங்களில் கொண்டு வந்து வைக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |