அரசாங்கத்திற்கு நெல் விற்பனை செய்யப் போவதில்லை : ஒன்றிணைந்த விவசாய அமைப்பு
அரசாங்கத்திற்கு நெல் விற்பனை செய்யப் போவதில்லை என ஒன்றிணைந்த விவசாய அமைப்பின் தலைவர் எஸ்.கே.மகிந்த சமரவிக்ரம(Mahinda Samarawickrema) தெரிவித்துள்ளார்.
தனியார் வியாபாரிகள் வயலுக்கே சென்று பச்சை நெல் ஒரு கிலோவிற்கு (உலர்த்தப்படாத நெல்) 150 முதல் 170 ரூபா வரையிலான விலையை கொடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் மீதான விமர்சனம்..
எனவே தனியார் துறையினருக்கு நெல்லை விற்பனை செய்வதனை தவிர்த்து குறைந்த விலைக்கு அரசாங்கத்திற்கு விற்பனை செய்யத் தயாரில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரசாங்கம் எதிர்க்கட்சியில் இருந்த காலத்தில் கூறிய எதனையும் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் செய்வதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான ஓர் பின்னணியில் எவ்வாறு அரசாங்கம் நெல்லுக்கு உத்தரவாத விலையை நிர்ணயிக்கும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நெல் அறுவடை செய்யும் காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் அரசாங்கம் நெல்லுக்கான உத்தரவாத விலையை நிர்ணயம் செய்வதற்கு காலம் தாழ்த்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
உலர்த்தப்பட்ட நெல்லையே அரசாங்கம் கொள்வனவு செய்வதாகவும் அவ்வாறு விற்பனை செய்த நெலுக்கான கொடுப்பனவை பெற்றுக்கொள்ள வரிசையில் காத்திருக்க நேரிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனியார் ஆலை உரிமையாளர்கள் வயலுக்கே சென்று உலர்த்தப்படாத நெல் ஒரு கிலோவிற்கு 150 முதல் 170 ரூபா என்ற விலைக்கு கொள்வனவு செய்வதாகத் தெரிவித்துள்ளார்.
இதனால் நெல்லை உலர்த்துவதற்கான நேர விரயமும் செலவும் தமக்கு கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.