ஈரான் தலிபான் இராஜதந்திர உறவில் முக்கிய பேச்சுவார்த்தை
ஈரானிய வெளியுறவு அமைச்சர் ஆப்கானிஸ்தானுக்கான தனது விஜயத்தின்போது, அந்நாட்டு தலிபான் அரசாங்க பிரதமர் ஹசன் அகுந்தை சந்தித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டில் தலிபான்கள் ஆப்கானிஸ்தான் தலைநகரை கைப்பற்றியதை தொடர்ந்து, உயர்மட்ட ஈரானிய அதிகாரியொருவர், அங்கு விஜயம் செய்வது, முக்கிய விடயமாக பார்க்கப்படுகிறது.
இடம்பெயர்வு மற்றும் நீர் வளங்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக சர்ச்சைக்குள்ளாகும் அண்டை நாடுகளுக்கு இடையிலான உறவுகள் குறித்து இதன்போது விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பொருளாதார ஒத்துழைப்பு
குறித்த சந்திப்பில் இரு தரப்பினரும் பொருளாதார ஒத்துழைப்பு, ஈரானில் ஆப்கானிய குடியேறிகளின் நிலைமை, எல்லைப் பிரச்சினைகள் மற்றும் நீர் உரிமைகள் ஆகியவை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்க ஆதரவு பெற்ற அரசாங்கத்தை தலிபான்கள் பதவி நீக்கம் செய்தை தொடர்ந்து, பல நாடுகள் காபூலில் உள்ள தங்கள் தூதரகங்களை மூடின. இராஜதந்திர உறவுகளை குறைத்தன,
ஆனால் ஈரான் ஆப்கானிஸ்தானின் புதிய ஆட்சியாளர்களுடன் தீவிர இராஜதந்திர உறவுகளைப் பேணி வருகிறது.
இருப்பினும் இன்னும் தலிபான் அரசாங்கத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





ரூ.400 கோடி மதிப்புள்ள நிறுவனத்திற்கு சொந்தக்காரர்.., தற்போது தேர்தலில் போட்டியிட விருப்பம் News Lankasri

15 வயதில் வீட்டின் அறையில் அடைத்த பெற்றோர்! 27 ஆண்டுகளுக்கு பின் 47 வயதில் பெண் மீட்பு News Lankasri

கனடாவில் வாழ்வாதாரத்திற்காக டாக்சி ஓட்டும் இராணுவ வைத்தியர் - இந்திய பெண் பகிர்ந்த அனுபவம் News Lankasri

ஆட்டத்திற்கு என்ட் கார்ட் போட்ட மக்கள்.. இந்த வாரம் வெளியேறும் சின்னத்திரை பிரபலம் யார் தெரியுமா? Manithan
