கிவுல் ஓயாத் திட்டத்தை கடுமையாக எதிர்ப்போம் - ரவிகரன் எம்.பி. திட்டவட்டம்

Parliament of Sri Lanka K.D. Lalkantha Thurairajah Raviharan
By Rakesh Jan 22, 2026 10:23 AM GMT
Report

தமிழர்கள் மீதான கட்டமைக்கப்பட்ட இனவழிப்பின் வடிவமான கிவுல் ஓயா திட்டத்தை செயற்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று நாளை (23.01.2026) நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ள நிலையில், அந்தக் கலந்துரையாடலில் இந்தத் திட்டத்துக்கு எதிராகத் தம்மால் கடுமையான எதிர்ப்பு வெளியிடப்படும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் நேற்று (21.01.2026) நடைபெற்ற கமத்தொழில், கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கூட்டத்தில் கிவுல் ஓயா நீர்ப்பாசனக் கட்டுமானத் திட்டத்துக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டார்.

இந்நிலையில் நாளை கிவுல் ஓயாத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும், கலந்துரையாடலில் அந்த விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்குமாறும் அமைச்சர் கே.டீ.லால்காந்த இதன்போது தெரிவித்தார்.

தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்க தயங்கப் போவதில்லை – லால்காந்த

தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்க தயங்கப் போவதில்லை – லால்காந்த

கிவுல் ஓயா நீர்த்தேக்கக் கட்டுமானத் திட்டம்

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் நேற்று கமத்தொழில், கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், மகாவலி அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படவிருக்கின்ற கிவுல் ஓயா நீர்த்தேக்கக் கட்டுமானத் திட்டத்துக்கு 2.5 பில்லியன் ரூபா நிதி இந்த வருடத்துக்கான வரவு - செலவுத் திட்டத்தில் அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டதுடன் இந்த கிவுல் ஓயாத் திட்டத்தைச் செயற்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதியும் பெறப்பட்டுள்ளது.

கிவுல் ஓயா திட்டத்தைச் செயற்படுத்தினால் வவுனியா வடக்கு பிரதேசத்திலுள்ள பூர்வீகத் தமிழ் மக்களின் பல சிறிய நீர்பாசனக் குளங்களும், அவற்றின் கீழான வயல் நிலங்களும், பழந்தமிழ் கிராமங்களும் பறிபோகும் அபாயம் ஏற்படும் என்பதைக் கமத்தொழில், கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் அமைச்சர் லால்காந்தவின் கவனத்துக்குக் கொண்டு வந்தேன்.

கிவுல் ஓயாத் திட்டத்தை கடுமையாக எதிர்ப்போம் - ரவிகரன் எம்.பி. திட்டவட்டம் | We Will Oppose The Kivu Oyath Project Ravikaran

விகாரை விடயங்களில் தலையிட முயன்றால் நாட்டுக்கு என்ன நடக்கும்! ரணில் கவலை

விகாரை விடயங்களில் தலையிட முயன்றால் நாட்டுக்கு என்ன நடக்கும்! ரணில் கவலை

ஏற்படவுள்ள அபாயம்

குறிப்பாக இராமன்குளம், கொட்டோடைக்குளம், ஒயாமடுக்குளம், வெள்ளான்குளம், பெரியகட்டுக்குளம், பனிக்கல்மடுக்குளம், சன்னமுற்றமடுக்குளம், கம்மாஞ்சிக்குளம், குறிஞ்சாக்குளம், புலிக்குட்டிக்குளம், திரிவைச்சகுளம் முதலான சிறிய நீர்ப்பாசனக்குளங்களும், வெடிவைச்சகல்லு குளத்தின் கீழ் வரும் வயல்காணிகள் பகுதியளவிலும், நாவலர்பாம், கல்லாற்றுக்குளம், ஈச்சன்குளம், கூழாங்குளம் வயற்காணிகளும் வவுனியா வடக்கிலுள்ள பழந்தமிழ் கிராமங்களான காட்டுப்பூவரசங்குளம் கிராமம், காஞ்சூரமோட்டை கிராமம், மருதோடைக் கிராமத்தின் ஒருபகுதி உள்ளிட்ட பகுதிகள் குறித்த நீர்ப்பாசன அணைக்கட்டின் நீரேந்துப்பகுதிகளாக மாறும் அபாயம் ஏற்படும் என்பதை இதன்போது அமைச்சருக்குத் தெரியப்படுத்தினேன்.

தமிழர் பகுதியில் அநுரவின் 2345 கோடிரூபாய் திட்டம்! பின்னணி தொடர்பில் வெளியான தகவல்

தமிழர் பகுதியில் அநுரவின் 2345 கோடிரூபாய் திட்டம்! பின்னணி தொடர்பில் வெளியான தகவல்

இவ்வாறு தமிழ் மக்களுடைய பூர்வீக நிலங்களும், நீர்ப்பாசனக்குளங்களும் அபகரிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையும் சுட்டிக்காட்டினேன். இதன்போது அமைச்சர் கே.டீ.லால்காந்த பதிலளிக்கையில், எதிர்வரும் 23ஆம் திகதி (நாளை) நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் கிவுல் ஓயாத் திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும், அதன்போது இந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடலாம் எனவும் தெரிவித்தார்.

எனவே எதிர்வரும் 23ஆம் திகதி (நாளை) நடைபெறவுள்ள கூட்டத்திலும் கலந்துகொண்டு, கிவுல் ஓயாத் திட்டத்தால் தமிழர்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்புகள் தொடர்பில் சுட்டிக்காட்டுவதுடன், இந்தத் திட்டத்துக்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவிப்பேன் என்றார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom, இணுவில் கிழக்கு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US