புதிய வரிகள் தொடர்பில் ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட உள்ள வரவு செலவுத் திட்டத்தில் புதிய வரிகள் விதிக்கப்படாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்ட ஆவணத்தில் புதிய வரிகள் எதனையும் அறிமுகம் செய்யாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வரிச்சுமை அதிகம் என சிலர் குறிப்பிடுவதாகவும் இவ்வாறு ஏன் வரிச் சுமை அதிகரித்துள்ளது என்பது குறித்து கண்டறிய வேண்டுமென தெரிவித்துள்ளார்.
வெளியே பொருளாதாரத்தினை விஸ்தரிப்பதன் மூலம் வரிகளை குறைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் அனைத்து பிரஜைகளும் 18 வீத வரியை செலுத்து நியாயமற்றது என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், பொருளாதாரம் விஸ்தரிக்கப்படாத நிலையில் வேறு வழியின்றி வரிகளை அதிகரிக்க நேரிட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த கால அரசாங்கங்களின் வரவு செலவுத் திட்டங்களில் புதிதாக வரிகள் அறிமுகம் செய்யும் நடைமுறைகள் காணப்பட்டதாகவும் இது தவறானது எனவும் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.



