இலங்கை இந்தியாவின் மாநிலமாகின்றமை தொடர்பிலான செய்தி! இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அறிவிப்பு
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் டுவிட்டர் கணக்கிற்குரியதென காண்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட போலியான படம் தொடர்பாக நாம் அறிந்துள்ளோம் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
அத்துடன் இது முழுக்கமுழுக்க போலியானதும் புனையப்பட்டதுமாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பான பதிவில் மேலும், தீய எண்ணத்துடனான இதன் உள்ளீடுகளை நாம் கடுமையாக மறுக்கின்றோம்.
இந்தியா இலங்கை இடையில் காணப்படும் நட்புரீதியானதும், நெருக்கமானதும், தொன்மையானதுமான உறவை பாதிக்கும் வகையில், அவநம்பிக்கை கொண்ட தரப்பினரால் மேற்கொள்ளப்படும் தீய நோக்கத்துடனான இம்முயற்சிகள் ஒருபோதும் வெற்றியடையப் போவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் வாழும் மக்கள் விரும்பினால் இலங்கையை இந்தியாவின் மாநிலமாக்குவோம், அதனூடாக இலங்கையில் தற்போது காணப்படும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காணக்கூடியதாக இருக்கும் என இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாகவும், அத்துடன் தென்னிந்திய பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் போலியான புகைப்படங்கள் தொடர்பிலேயே இவ்வாறு இந்திய உயர்ஸ்தானிகராலயத்தால் அறிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.



ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
