அரச மருத்துவர்கள் சங்கம் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
நாட்டில் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வரும் மருத்துவர்களின் தொழிற்சங்கப் போராட்டத்திற்கு தீா்வு காண சுகாதார அமைச்சர் முனைப்பு காட்டவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் முன்வைத்துள்ள பிரச்சினைகள் குறித்து அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு அமைச்சர் இதுவரையில் இணங்கவில்லை என சங்கத்தின் செயலாளர் டொக்டர் பிரசாத் சுகததாச குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன் காரணமாகவே தொழிற்சங்க நடவடிக்கைகளை தொடர நேரிட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் வழங்கும் பதில்களின் அடிப்படையில் எதிர்கால நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத் தரப்பில் தீர்மானம் எடுப்பதற்கு காண்பிக்கப்படும் கால தாமதம் நோயாளிகளை நேரடியாக பாதிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
இன்று முற்பகல் அரசாங்கத் தரப்பில் வழங்கப்படும் பதில்களின் அடிப்படையில் தொழிற்சங்கப் போராட்டத்தை கடுமையாக்குவதா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும் என டொக்டர் சுகதபால தெரிவித்துள்ளார்.