மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் கைது செய்யப்படுவார்! அனுர உறுதி
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தாம் ஜனாதிபதியாக பதவி ஏற்றதன் பின்னர் சிவப்பு பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள அர்ஜூன் மகேந்திரனை கைது செய்து இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆலோசனை
மத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கலை மேற்கொள்ளுமாறு அப்போது மத்திய வங்கிக்கு பொறுப்பான அமைச்சர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
அர்ஜூன் மகேந்திரன் கோப் குழு விசாரணைகளின் போது இந்த விடயம் தொடர்பில் வாக்குமூலமொன்றை அளித்திருந்தார் எனவும் இதனால் அவர் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார் எனவும் தெரிவித்துள்ளார்.
அர்ஜூன் மகேந்திரன் மற்றும் ரணில் விக்ரமசிங்கவிடம் நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்படும் என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri
