ஜனாதிபதிக்கு மற்றுமொரு ஆலோசகர் :வழங்கப்பட்ட நியமனக் கடிதம்
ஜனாதிபதியின் விசேட ஆலோசகராக முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando) நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசியலமைப்பின் கீழ் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேட ஆலோசகர்
இதன்படி, முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் விசேட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகித்த ஹரின், ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்துக்கு ஆதரவளித்ததன் மூலம் உயர்நீதிமன்றின் தீர்ப்பின்படி, அந்த கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்
இதனையடுத்தே அவருக்கு ஆலோசகர் பதவியை ரணில் விக்கிரமசிங்க வழங்கியுள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
