சமஸ்டித் தீர்வுக்கான இந்தியாவின் வலியுறுத்தலை வரவேற்கின்றோம்: சபா குகதாஸ்
சமஸ்டித் தீர்வுக்கான இந்தியாவின் வலியுறுத்தலை வரவேற்கின்றோம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ரெலோ இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
ஊடக அறிக்கையொன்றில் நேற்று (02.11.2011) இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
”அண்மையில் இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்திய புலனாய்வுத்துறையான றோவின் தலைவர் சமந்தகுமார் கோல் உடன் சந்தித்து கலந்துரையாடியதாக ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியதாக ஊடகங்களில் வெளியான செய்தியில் ஈழத் தமிழர்களின் நீண்ட கால இனப்பிரச்சினைக்கு சமஸ்டித் தீர்வை வலியுறுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளதை நல்லெண்ண ஆரம்பமாக நாம் வரவேற்கின்றோம்.
பாரத தேசத்தின் நல்லெண்ண வெளிப்பாட்டை வரவேற்பதுடன் தமிழ் மக்களின் மறுக்கப்பட்ட நீண்ட கால அபிலாசையான சமஸ்டி அரசியல் தீர்வு கிடைப்பதற்கு தொடர்ந்து இந்திய மத்திய அரசு பங்களிக்க வேண்டும்.
இதுவே ஈழத் தமிழர்களின் எதிர்பார்ப்பு அத்துடன் இந்தியாவின் மத்தியஸ்த்துடன் கொண்டு வரப்படும் சமஸ்டித் தீர்வே நிரந்தரத் தீர்வாக அமையும் என ஈழத் தமிழ் மக்கள் நம்புகின்றனர்.
பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு ஒரு நிரந்தர பரிகார நீதியை இந்தியாவே பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை நீண்ட காலமாக தாயக புலம்பெயர் ஈழத் தமிழர்கள் கோரி வருகின்றனர்.
சமஷ்டிக் கோரிக்கை
இந்நிலையில் 1949ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களின் ஜனநாயக தேர்தல்களில் மக்கள் ஆணை சமஷ்டிக் கோரிக்கையாகவே இருக்கின்றது.
மேலும் தமிழர்களின் ஜனநாயக அபிலாசையை
பெற்றுக் கொடுக்க பாரத தேசம் பற்றுதியுடன் பணியற்ற வேண்டும்” என்றார்.


அதானி குழுமத்தின் மோசடிகளை அம்பலப்படுத்திய அமெரிக்கா 8 மணி நேரம் முன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தாய், தந்தையா இவர்கள்.. இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் Cineulagam

தமிழ்நாட்டில் இதுவரை வாரிசு, துணிவு படங்களுக்கு கிடைத்த வசூல்.. முன்னிலையில் இருப்பவர் யார் Cineulagam

வெளிநாட்டில் இருந்து வந்த மாமியார்! சில நாட்களில் உயிரிழந்த மருமகள் மற்றும் இரட்டை குழந்தைகள் News Lankasri
