ரஷ்ய விமானம் குறித்து நாமல் வெளியிட்ட ட்வீட்டர் பதிவு
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்ய ‘ஏரோஃப்ளோட்’ விமானம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தமது உத்தியோகபூர்வ ட்வீட்டர் பதிவொன்றிலே இதனை தெரிவித்துள்ளார்.
Authorities must immediately take steps to resolve the issues of #aeroflot in #LKA.#RUS has been a long standing ally of #LKA & has supported us even at the #UNHRC. RUS continued to assist LKA by sending tourists through the pandemic to help revive our tourism industry as well.
— Namal Rajapaksa (@RajapaksaNamal) June 4, 2022
இலங்கை- ரஷ்ய உறவு
ரஷ்யா இலங்கையுடன் நீண்டகாலமாக சுமுகமான உறவை பேணி வருவதாகவும், ஆபத்தான நேரங்களில் ரஷ்யா இலங்கைக்கு ஆதரவளித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கோவிட் தொற்றின் போது கூட ரஷ்யா தொடர்ந்து உதவியதோடு, நமது சுற்றுலாத் துறையையும் புத்துயிர் பெற உதவும் வகையில் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அனுப்பியிருந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்கான விமான சேவைகளை நிறுத்திய ரஷ்ய நிறுவனம் |