இலங்கைக்கான விமான சேவைகளை நிறுத்திய ரஷ்ய நிறுவனம்
ரஷ்யாவின் Aeroflot விமான நிறுவனம், இலங்கைக்கான விமான சேவைகளை மறு அறிவித்தல் வரை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தியுள்ளது.
Aeroflot விமான சேவைக்கு சொந்தமான விமானத்தை ரஷ்யாவிற்கு புறப்பட அனுமதிக்காமல் கட்டுநாயக்காவில் தடுத்து வைத்தமையே இதற்கு காரணமாகும்.
அதற்கமைய, இலங்கைக்கு வர்த்தக விமானங்களை இயக்க மாட்டோம் எனவும் இலங்கைக்கான பயணத்திற்கு விமான டிக்கெட்டுகளை விற்க மாட்டோம் எனவும் நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் அந்த விமான சேவை மூலம் ரஷ்யா திரும்ப எதிர்பார்த்திருந்த பயணிகளுக்கும் முன்பதிவு செய்யப்பட்ட விமானம் ஒன்றின் மூலம் ரஷ்யாவுக்கு அழைத்து வருவதாக அறிவித்துள்ளது.
இந்த விமானம் விமான ஊழியர்களுடன் மாத்திரமே பயணிக்கும் என விமான சேவை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
குடியேற்றவாசிகளின் வன்முறை: மேற்கத்திய நாடுகளுடன் சேர்ந்து..அவசர அழைப்பு விடுத்த ஜேர்மனி News Lankasri
ரிஷப ராசியில் உதயமாகும் புதன் - சுக்கிரன் : இன்று முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan
3 மற்றும் 5 வயது குழந்தையை காட்டில் கைவிட்ட பிரான்ஸ் பெற்றோர்: போர்ச்சுகல் பொலிஸார் அதிரடி News Lankasri