குரங்குகளை கொலை செய்வதில் தவறில்லை – எஸ்.பி. திஸாநாயக்க
குரங்குகளை கொலை செய்வதில் தவறில்லை என முன்னாள் அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
குரங்குகள் உள்ளிட்ட கூடுதலாகக் காணப்படும் விலங்குகளை கொலை செய்ய வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
விலங்குகளை கொலை செய்வது குறித்து சிலர் கருத்து வெளியிட்டு வரும் போதிலும் அவற்றை கருத்திற்கொள்ளத் தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சூழலியலாளர்களின் கருத்துக்கள்
நாடு முழுவதிலும் ஆண்டுதோறும் தெருநாய்கள் கொல்லப்படுவதாகத் தெரிவித்துள்ளார். விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்தவின் கருத்துடன் பூரணமாக இணங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், காட்டு யானைகள் தொடர்பில் வேறு விதமான அணுகுமுறைகள் பின்பற்றப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார். இலங்கையில் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையில் யானைகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
யானைகளுக்கான தடுப்ப வேலிகளை பலப்படுத்த வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். சூழலியலாளர்களின் கருத்துக்களை மட்டும் கேட்டால் இந்த நாட்டில் விவசாயத்தை மேற்கொள்ளவோ அல்லது பொதுமக்களை பாதுகாக்கவோ முடியாது போகும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க கொழும்பில் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam
