சவால்களை வெற்றிகரமாக அச்சமின்றி எதிர்கொண்ட மொட்டுக்கட்சி! நாமல் பெருமிதம்
இதுவரை காலமும் தாம் எதிர் நோக்கிய சவால்களை வெற்றிகரமாக அச்சமின்றி எதிர்கொண்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
குருணாகல் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் (4) நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் குருணாகல் மாவட்ட அமைப்பாளர்களுக்கு நியமன கடிதங்களை வழங்கும் நிகழ்வில் கருத்து வெளியிட்ட போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பல்வேறு சவால்கள்
நாங்கள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளோம் எனவும் அவ்வாறான சவால்களுக்கு தாம் அஞ்சியது கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தாம் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் சவால்களையும் நேசித்து வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
கட்சி என்ற வகையில் எந்த ஒரு சவால்களையும் எதிர் நோக்கி முன்னோக்கி செல்லும் இயலுமை கிடைத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
உண்மையிலேயே விவசாயிகளை மேம்படுத்தி அவர்களுக்கு பொருத்தமான ஒரு சூழலை உருவாக்கியது மகிந்த ராஜபக்ச யுகத்தில் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
திருடர்கள் எனவும் நாட்டை அழிவித்து விட்டதாகவும், வரிகளை குறைத்ததாகவும் குற்றம் சுமத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும் தங்களை வரிகளை குறைத்து மக்களுக்கு வாழக்கூடிய சூழலை உருவாக்கியதாகவும் மக்களின் வாழ்க்கைச் செலவு சுமை அதிகரித்து செல்வதனை கட்டுப்படுத்த வேண்டுமாயின் வரிகளை குறைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்க வருமானத்தை அதிகரித்துக் கொள்ள அரசு நிறுவனங்களை லாபமீட்டும் நிலைக்கு உயர்த்த வேண்டும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.





சேரன் எடுத்த திடீர் முடிவால் கண்ணீரில் சோழன், பாண்டியன், பல்லவன், நிலா... அய்யனார் துணை சோகமான புரொமோ Cineulagam

காரை நிறுத்திய பொலிசாரிடம் மனைவிக்கு பிரசவ வலி என்று கூறிய பிரித்தானியர்: தெரியவந்த உண்மை News Lankasri

கணவர் இறந்த பின்னரும் தாலியுடன் இருக்கும் பிரியங்கா- அவ்வளவு பிரியம்.. நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
