காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவுகள் கிடைக்கும் வரைக்கும் எங்களுக்கு சுதந்திரம் இல்லை!
முல்லைத்தீவு மாவட்டத்தில் 1424 ஆவது நாளாகவும் தொடர் போராட்டம் மேற்கொண்டு வரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தின் தலைவி ம.ஈஸ்வரி ஊடக சந்திப்பு ஒன்றினை நேற்று நடத்தியுள்ளார்.
இதன்போது அவர் கருத்து தெரிவிக்கையில்,
பெப்ரவரி 04 ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினம் அன்றைய நாள் காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவுகள் கிடைக்கும் வரைக்கும் எங்களுக்கு சுதந்திரம் இல்லை.
சுதந்திர தினத்தினை நாங்கள் கரிநாளாக புறக்கணித்து கறுப்பு பட்டி அணிந்து உணவுத்தவிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளோம்.
எதிர்வரும் ஐ.நா சபையின் அமர்வில் எங்களுக்கான தீர்வு கிடைக்க வேண்டும். தொடர்ச்சியாக எங்கள் உறவுகளை நாங்கள் தேடிக்கொண்டிருக்கின்றோம். நான்கு ஆண்டுகளை கடந்த நிலையிலும் வீதியில் இறங்கி தொடர்ச்சியாக போராட்டம் மேற்கொண்டு வருகின்றோம்.
எதிர்வரும் ஐ.நா அமர்வில் இலங்கை அரசிற்கு எந்த கால நீடிப்பும் கொடுக்காமல் எங்களுக்கான நீதியினை பெற்றுதர வேண்டும். சர்வதேச விசாரணை தான் வேணும் என்று சொல்லி நிற்கின்றோம்.
இலங்கையில் பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்களுக்கான நீதியினை பெற்றுத்தர முடியவில்லை இருந்தும் நாங்கள் அழுத்தங்களை கொடுக்கின்றோம். காணாமல்போன பிள்ளைகளை தேடிய பெற்றோர்கள் தொடர்ச்சியாக இறந்து கொண்டு போகின்றார்கள்.
கிளிநொச்சி,கந்தசாமி ஆலய முன்றலில் எதிர்வரும் 02 ஆம் திகதி தொடக்கம் 06 ஆம் திகதி வரை உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்.
உலக நாடுகளில் உள்ள மக்கள் எங்களுக்கான ஆதரவினை தர வேண்டும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.





மாதம்பட்டி ரங்கராஜை மறுமணம் செய்த ஜாய் கிரிசில்டாவின் முதல் கணவர் யார் தெரியுமா?... போட்டோவுடன் இதோ Cineulagam

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
