நாட்டிலுள்ள பிரச்சினையை தீர்க்க கட்சிசார் மனநிலையை உடன் கைவிடவேண்டும்: நஸீர் அஹமட் (Photos)

Sri Lanka Economic Crisis Easter Attack Sri Lanka Naseer Ahamed Sri Lankan political crisis
By Kumar May 24, 2022 01:37 PM GMT
Report

நாட்டில் ஏற்பட்டிருப்பது அரசியல் பிரச்சினையல்ல, பொருளாதாரப் பிரச்சினைதான். இந்த நெருக்கடியைத் தீர்க்க கட்சிசார் அரசியல் மனநிலைகளை கைவிட வேண்டும் என சுற்றாடல் அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

அமைச்சு கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வில் இன்று உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் ஏற்பட்டுள்ளது அரசியல் பிரச்சினையல்ல. பொருளாதாரப் பிரச்சினையே. இது, எல்லோரையும் பாதிக்கும் பிரச்சினை. எனவே, சகலரதும் ஒத்துழைப்பு இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்குத் தேவைப்படுகிறது.

நாட்டிலுள்ள பிரச்சினையை தீர்க்க கட்சிசார் மனநிலையை உடன் கைவிடவேண்டும்: நஸீர் அஹமட் (Photos) | We Drop Partisan Mentality Solve Problem Country

இப்பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு இந்த அரசாங்கம் தான் காரணமென்பதுமில்லை. கடந்த காலங்களில் விடப்பட்ட தவறுகள் மற்றும் இயற்கை நெருக்கடிகளால் ஏற்பட்டுள்ளவைதான் இவை. ஈஸ்டர் தாக்குதல், அதன் பின்னரான கோவிட் தொற்றுக்களால் தொடர்ந்து நமது நாடு முடங்க நேரிட்டது.

இந்தக் காலங்களில் சுற்றுலாத்துறை வீழ்ந்தது. வெளிநாடுகளிலிருந்து பணம் அனுப்பப்படுவதும் வெகுவாகக் குறைந்தது. உள்நாட்டு உற்பத்திகளில் ஏற்பட்ட வீழ்ச்சி, ஏற்றுமதி செலாவணி வருமானத்தைப் பாதித்தது. இவைகள்தான், இந்த நிதி நெருக்கடியை ஏற்படுத்தின.

நாட்டிலுள்ள பிரச்சினையை தீர்க்க கட்சிசார் மனநிலையை உடன் கைவிடவேண்டும்: நஸீர் அஹமட் (Photos) | We Drop Partisan Mentality Solve Problem Country

இதுபற்றி முறையாகச் சிந்தித்தால் மூன்று மாதங்களில் எரிபொருள் பிரச்சினையைத் தீர்க்கலாம். நான், சவூதி அரேபியாவிலுள்ள பெற்றோலியம் கனியவள பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றவன். எங்கள் பல்கலைக்கழகத்தில் கல்விகற்றவரே இன்று சவூதி அரேபியாவில் எரிபொருள் அமைச்சராக உள்ளார்.

எனவே, இதுகுறித்த எனது நிபுணத்துவத்தைப் பகிர்ந்துகொண்டு இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண முயற்சிக்கப்படும். முதலமைச்சராக இருந்த காலத்தில் கூட, இவ்வாறான பல சவால்களை வெற்றிகொள்ள முடிந்திருக்கிறது. ஊழல், இலஞ்சம் என்பன எனது அரசியலில் இல்லை. எனது அரசியல் எதிரிகளால் கூட இதை நிரூபிக்க முடியாது.

நாட்டிலுள்ள பிரச்சினையை தீர்க்க கட்சிசார் மனநிலையை உடன் கைவிடவேண்டும்: நஸீர் அஹமட் (Photos) | We Drop Partisan Mentality Solve Problem Country

தற்போதைய சூழ்நிலையால், அரசியலிலும் சில பிரச்சினைகள் எழுந்துள்ளன. கட்சிகளுக்கு அப்பால் சென்று தான் இப்பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். இதனால்தான், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்துகொண்டு அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்குகிறேன்.

இந்த ஜனாதிபதி, மற்றும் பிரதமர் ஆகியோர் என்னில் நம்பிக்கை வைத்தே இந்த அமைச்சுப்பதவியை வழங்கி உள்ளனர். இதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

நாட்டிலுள்ள பிரச்சினையை தீர்க்க கட்சிசார் மனநிலையை உடன் கைவிடவேண்டும்: நஸீர் அஹமட் (Photos) | We Drop Partisan Mentality Solve Problem Country

இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், அலிசப்ரி ரஹீம், முஷர்ரஹ்ப் மற்றும் அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US