தகவல் அறியும் உரிமை சட்ட படிவம் தொடர்பில் வடக்கு மாகாண நிர்வாக அதிகாரிகள் கருத்து
வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில்(Secretariat of the Governor of Northern Province) தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படிவங்களை நாம் வழங்குவதில்லை என ஆளுநர் அலுவலக நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
இன்றைய தினம் ஆளுநர் அலுவலகத்திற்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல்களை பெறுவதற்காக ஊடகவியலாளர்கள் சென்ற பொழுது அங்கே தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கான விண்ணப்ப படிவம் வழங்கப்படுவதில்லை என அலுவலகத்தில் கடமையாற்றும் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆளுநர் அலுவலகம்
தொடர்ந்து தகவல் உத்தியோகத்தர் உள்ளாரா என கேட்டபொழுது நிர்வாக உத்தியோகத்தர் ஒருவரிடம் கதைப்பதற்கு குறித்த அதிகாரி அனுமதி வழங்கியுள்ளார்.
குறித்த அதிகாரியிடம் படிவத்தை வினவிய பொழுது தகவல் அறியும் உரிமை சட்ட படிவம் இணையதளத்தில் உள்ளது நாம் வழங்குவதில்லை என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவ்வாறு வழங்ககூடாது என ஏதும் சட்டதிட்டங்கள் உள்ளதா? என வினவிய பொழுது தகவல் அறியும் உரிமை சட்டம் தகவலை பெற்றுகொள்ள வெளியில் இருந்து வருவதனால் எம்மால் வழங்கப்படுவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து ஆளுநரை தொடர்பு கொள்ள முயற்சித்த பொழுதும் தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |