குறைந்த விலைக்கு நெல்லை வாங்குங்கள் என்று நாங்கள் குறிப்பிடவில்லை: கமக்காரர்கள் அமைப்பு சுட்டிக்காட்டு
எந்த ஒரு இடத்திலும் நாங்கள், '120 ரூபாய் எங்களுடைய நெல்லை வாங்குங்கள்' என்று நாங்கள் குறிப்பிடவில்லை. அந்த விடயத்தை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என கமக்காரர்கள் அமைப்புகளின் மாவட்ட அதிகாரசபையின் தலைவர் சி.சந்திரமோகன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 12-06-2026 அன்று, எங்களுடைய மாவட்டத்தில் நெல் அறுவடை நடைபெறப்போகின்றது. இடைபோக அறுவடை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
வியாபாரிகள், தனியார் வியாபாரிகள் 5,000 ரூபாய்க்கு குறைவான விலையிலும், அதற்கு அண்மித்த விலையிலும் தான் நெல்லை வாங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
வேண்டுகோள்
எங்களுடைய ஒரு கிலோ நெல்லுக்கான உற்பத்திச் செலவு 135 ரூபாயாக இருக்கின்றது. 150 ரூபாயாவது தர வேண்டும் என விவசாய அமைச்சருக்கு நாங்கள் கடிதம் மூலம் தெரிவித்திருந்தோம்.

அவருக்கு உற்பத்திச் செலவினையும் மிக விவரமாக, தெளிவாக எழுத்து மூலம் அறிவித்திருந்தோம். அதற்கு எந்தவிதமான பதிலும் தராததால், நாங்கள் 23 ஆம் திகதி ஒரு அறவழி கவனயீர்ப்பு போராட்டத்திற்கு விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தோம்.நாங்கள் முன்வைத்த கோரிக்கைக்கு ஒரு சரியான பதிலும் தரவில்லை.
ஆனால், நாங்கள் சொல்கின்ற விடயம் என்னவென்றால், 135 ரூபாதான் எங்களுக்கு உற்பத்திச் செலவு. நீங்கள் 150 ரூபாய் தர வேண்டும். இதுதான் எங்களுடைய இறுதியான விடயம், இறுதியான வேண்டுகோள் என்பதை நாங்கள் நேரடியாக ஜனாதிபதிக்கு இந்த விடயத்தைக் கூறுகின்றோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.