இராணுவத்தை நாம் சுடவில்லை! - செட்டிகுளம் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள்
“இராணுவத்தை நாம் சுடவில்லை, எம்மை நோக்கி இராணுவமே துப்பாக்கிச்சூட்டை நடத்தியது” என செட்டிகுளம் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியா - செட்டிகுளம் பேராறு காட்டுப்பகுதியில் இராணுவத்தின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்ததாக கூறப்படும் இளைஞர் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்தார்.
குறித்த இளைஞர் உட்பட மூன்று பேர் பேராறு காட்டுப்பகுதிக்கு சென்றுவிட்டு நேற்று மாலை வீடு திரும்பியுள்ளனர். இதன்போது “தங்கள் மீது, மறைந்திருந்த இராணுவத்தினர் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுள்ளதாக” பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும் இராணுவத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டமையால் அவர்கள் மீது இராணுவத்தினர் மீண்டும் துப்பாக்கி பிரயோகம் செய்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்திருந்தது. என்ற போதும் “தாம் அவ்வாறு துப்பாக்கிகள் எதனையும் வைத்திருக்கவில்லை”
என்று பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.
“தாங்கள் மரங்களை அறுப்பதற்காகவே காட்டுப் பகுதிக்கு சென்றதாகவும், மீண்டும் வீடு நோக்கி திரும்பிக் கொண்டிருந்த போதே இராணுவம் திடீரென தங்கள் மீதுதாக்குதல் நடத்தியதாகவும்” அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவர் மீட்கப்பட்டு செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் மற்றும் ஒரு நபர் சிறுகாயங்களிற்கு உள்ளாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் செட்டிகுளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.









தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 18 மணி நேரம் முன்

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri
