நாங்கள் இனப்படுகொலை செய்யவில்லை! பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்
இனப்படுகொலை என்ற சொல்லை தாம் முற்றாக நிராகரிப்பதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ண தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாங்கள் இனப்படுகொலையில் ஈடுபட்டோம் என்றால் ஏன் 300,000 மக்களை வன்னியில் மீட்டோம். நாட்டின் பெயருக்கும் அரசாங்கத்தின் பெயருக்கும் களங்கத்தை ஏற்படுத்தவே இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
நாங்கள் வெற்றிகரமாக மனிதாபிமான நடவடிக்கையினை முன்னெடுத்ததை ஏற்றுக்கொள்ள சில வலுவான நாடுகள் தயாரில்லை. அதன் முடிவுகளையும் ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாரில்லை.
மாறாக அவர்கள் எங்களிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். ஆனால் யுத்தத்தின் போது தவிர்க்க முடியாதபடி உயிரிழப்புகள் ஏற்படும் என்பதை அனைவரும் புரிந்துகொள்வார்கள்.
இருதரப்பு மோதலில் ஈடுபடும்போது இருதரப்பும் தாக்குதலை மேற்கொள்ளும்போது உயிரிழப்புகள் தவிர்க்க முடியாதவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களிற்கு உயிரிழப்புகள் ஏற்படக்கூடாது என அரசாங்கம் எங்களிற்கு உத்தரவிட்டது ஆனால் அது சாத்தியமில்லை எனவும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.





திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri
