மகிந்தவை விலைக்கு வாங்கியதை போல எங்களை வாங்க முடியாது: அநுர - செய்திகளின் தொகுப்பு
மகிந்த ராஜபக்சவை விலைக்கு வாங்கியதை போன்று உலக நாடுகளால் எங்களை விலைக்கு வாங்க முடியாது என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடு என்ற ரீதியில் தனித்துச் செயற்பட முடியாது, சகல தரப்பினரின் ஒத்துழைப்புடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும். நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நாட்டுக்கு முன்னுரிமை வழங்கும் வகையிலான வெளிவிவகார கொள்கையில் இருந்து கொண்டு நாங்கள் செயற்படுவோம்.
இந்திய அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ அழைப்புக்கு அமைய இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தேன். இந்திய விஜயம் குறித்து சஜித் பிரேமதாச, மகிந்த ராஜபக்ச, ரணில் விக்ரசிங்க ஆகியோரின் தரப்பினர் கலக்கமடைந்து பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்கள். அந்த குற்றச்சாட்டுக்களைக் கண்டு நாங்கள் கலக்கமடையவில்லை.
தற்போது எதிரணி எமக்கும், அவர்களுக்கும் எவ்வித தொடர்புமில்லை என்று குறிப்பிட்டுக் கொள்பவர்கள் தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியானதும் ஒன்றிணைவார்கள்.
ரணிலுக்கும், சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் தனிப்பட்ட முரண்பாடுகள் காணப்படுவதால் அவர்கள் ஒன்றிணைவது நிச்சயமற்றதாக உள்ளது. ஒருவேளை ஒன்றிணையலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி் வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |