முதலமைச்சரை தாரைவார்த்துக் கொடுத்த தமிழரசுக் கட்சி: பிள்ளையான் தரப்பு விசனம்
அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக முஸ்லிம் காங்கிரசுக்கு தமிழரசுக் கட்சியினர் முதலமைச்சரை தாரைவார்த்துக் கொடுத்துள்ளனர் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ. பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் முருகன் கோயில் வீதியின் அபிவிருத்திப் பணிகளை இன்று (02.02.2024) ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

வாழ்த்துச்சொன்னதால் விலகமாட்டேன்! தமிழரசுக் கட்சிக்குள் அடம்பிடிக்கும் இரண்டு கைகளைத் தூக்கித்தெரிவான முக்கியஸ்தர்!
தமிழர்களின் நிர்வாகம்
மேலும் தெரிவிக்கையில், கடந்த காலத்தில் மிக நீண்ட வரிசையில் இரண்டு மூன்று நாட்கள் காத்திருந்து எரிபொருட்களை மக்கள் பெற்றுக் கொள்ள வேண்டிய நிலமை ஏற்பட்டிருந்து.
தற்போதைய ஜனாதிபதி நாட்டைப் பொறுப்பேற்றதும் அந்த நிலமை இல்லாமல் செய்துள்ளார். இதனால் மக்கள் சுமூகமாக வாழக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டிருக்கின்றது.
இரண்டு வருடங்களாக தமிழர்களுக்கு எந்த வித நிதி ஒதுக்கீடும் கிடைக்கவில்லை. தமிழர்களின் நிருவாகம், நிதி, நிலம், அனைத்தும் பறிபோய் அதன் விளைவை கிழக்குத் தமிழர்கள் அனுபவித்தார்கள்.
எனவே நாம் கிழக்குத் தமிழர்களின் இருப்பை பாதுகாப்பதற்காக சிந்தனையின்பால் ஒன்றிணைகின்ற கட்சிகளையும், தொண்டர்களையும், இணைத்துக் கொண்டு ஒரே கூரையின் கீழ் பயணிப்பதற்கு எமது கட்சி தெளிவாக இருக்கின்றது” என மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










அதிரவைக்கும் திருப்பம்... இஸ்ரேல் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரும் உலகளாவிய யூத பிரபலங்கள் News Lankasri
