உணவு தண்ணீர் இன்றி உழைத்து வரும் அரசாங்கம் - வசந்த சமரசிங்க
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட அமைச்சரவை உறுப்பினர்கள் உணவு தண்ணீர் இன்றி அர்ப்பணிப்புடன் கடமையாற்றி வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
உலகளாவிய ரீதியில் எழுந்துள்ள நெருக்கடி நிலையை எதிர்கொள்வதற்கு இவ்வாறு அரசாங்கம் கடுமையாக உழைத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியினர் கூறுவது போல இந்த விடயங்கள் எளிதானதல்ல அவர்கள் கூறுவது போன்று எளிதாக இந்த நெருக்கடிகளை தீர்த்துவிட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாம் எடுக்கும் சில தீர்மானங்கள் எவ்வாறு ஏனையவர்களை பாதிக்கும் என்பதை கருத்தில் கொண்டே தீர்மானங்களை எடுக்க வேண்டி உள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்னும் இரண்டு மூன்று வாரங்களில் உலகின் நிலைமை எவ்வாறு மாறும் என்பது பற்றி கணிக்க முடியாதுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் சஜித் பிரேமதாச நாடாளுமன்றில் இருந்து கொண்டு உலக நாடுகளுக்கு அறிவுரை கூறி வருவதாகவும் அவர்கள் அதனை ஏற்றுக் கொண்டார்களா என தெரியவில்லை எனவும் அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
18 நாள் முடிவில் ராதிகாவின் தாய் கிழவி திரைப்படம் செய்துள்ள மாஸ் கலெக்ஷன்... எவ்வளவு தெரியுமா? Cineulagam