நாட்டை கட்டியெழுப்ப நாம் தயார்: சஜித் பிரேமதாஸ
ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அரசினால் அழிக்கப்பட்ட தேசத்தை கட்டியெழுப்ப ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் நாங்கள் தயார் என எதிர்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
அவர் இன்று(11) வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், "நாட்டை ஸ்திரப்படுத்தி, நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துக்கு நாம் பங்களிக்கின்றோம்.
அறிவிப்பு
ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசை நியமிப்பதற்கும் நாம் தயார்.
இந்த செயற்பாட்டுக்கு எதிராக யாராவது நாடாளுமன்றத்தில் சதிகளை மேற்கொண்டால் அது தேசத்துரோக செயலாகும்.
வேண்டுகோள்
நாட்டை கட்டியெழுப்பும் பணியில் எமக்கு ஒத்துழைக்குமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றேன்”என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பதவி விலகும் முடிவை கோட்டாபய திரும்ப பெறுவதற்கான சமிக்ஞை: வெளியாகியுள்ள தகவல் |





மண்டபத்தில் சக்தி செய்த பிரச்சனை, ஜீவானந்தம் கேட்ட கேள்வி, குழப்பத்தில் ஜனனி.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

ஒருபுறம் கிம் - ட்ரம்ப் சந்திப்பு... மறுபுறம் வடகொரியாவில் ஊடுருவிய அமெரிக்க சிறப்புப்படை: திகில் பின்னணி News Lankasri
