பதவி விலகும் முடிவை கோட்டாபய திரும்ப பெறுவதற்கான சமிஞ்ஞை: வெளியாகியுள்ள தகவல்

Gotabaya Rajapaksa Mahinda Yapa Abeywardena Ranil Wickremesinghe Sri Lankan political crisis
By Steephen Jul 11, 2022 10:33 AM GMT
Report

பதவியில் இருந்து விலகும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முடிவு திரும்பபெறப்படும் அறிகுறிகள் தென்படுவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தின் திடீர் அறிவிப்பு - பிரதமரின் அறிவிப்பை மறுத்துள்ளதா?

பதவி விலகும் முடிவை கோட்டாபய திரும்ப பெறுவதற்கான சமிஞ்ஞை: வெளியாகியுள்ள தகவல் | President Signal To Withdraw His Decision

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளியிடும் அனைத்து அறிக்கைகளும் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்ட பின்னர், அவர் அதனை வெளியிடுவார் என ஜனாதிபதியின் செயலகம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், சபாநாயகர் வெளியிடும் அறிக்கைகள் மாத்திரமே ஜனாதிபதி வெளியிடும் அறிக்கைகளாக கருதப்படும் என ஜனாதிபதி செயலகம் கூறியுள்ளது.

இதனை பார்க்கும் போது ஜனாதிபதி தனது பதவி விலகும் முடிவை பிரதமருக்கு இன்று முற்பகல் அறிவித்துள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு கூறியதை மறுத்துள்ளதை போல் தெரிகிறது.

அப்படியில்லை என்றால், பதவி விலக தீர்மானித்துள்ள ஜனாதிபதி ஒருவர் அவசரமாக இப்படியான அறிவிப்பு ஒன்றை வெளியிட வாய்ப்பில்லை.

எவ்வாறாயினும் இதனை உறுதிப்படுத்திலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலகம் தற்போது இயங்கவில்லை என்பதே இதற்கு காரணம்.

அத்துடன் இதனை உறுதிப்படுத்த ஜனாதிபதியின் செயலாளரையோ ஏனைய உயர் அதிகாரிகளையோ தொடர்புக்கொள்ள முடியாத நிலைமை காணப்படுகிறது.

இதனடிப்படையில், இது ஜனாதிபதி பதவி விலகும் தீர்மானத்தை திரும்பபெறும் முதல் சமிக்ஞையாக இருக்கவும் வாய்ப்புள்ளது.

முடிவுகளை திரும்ப பெற்று கோட்டாபய உலக சாதனை படைக்கவும் வாய்ப்புள்ளது

பதவி விலகும் முடிவை கோட்டாபய திரும்ப பெறுவதற்கான சமிஞ்ஞை: வெளியாகியுள்ள தகவல் | President Signal To Withdraw His Decision

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவிக்காலத்தில் இதுவரை எடுத்த பல முடிவுகளை திரும்ப பெற்றுள்ள ஜனாதிபதி என்பதை புதிதாக கூற வேண்டியதில்லை.

இரசாயன உரத்திற்கு விதிக்கப்பட்ட தடை, அவ்வப்போது நடைமுறைப்படுத்திய அவசர காலச்சட்டம், ஊரடங்குச் சட்டம் போன்ற பல முடிவுகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச திரும்ப பெற்று வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிட்ட வரலாறு உள்ளது.

கோட்டாபய ராஜபக்ச தனது முடிவுகளை திரும்ப பெற்று வரலாற்று சாதனை படைக்கவும் வாய்ப்புள்ளது. இவ்வாறான நிலையில், ஜனாதிபதி எதிர்வரும் 13 ஆம் திகதி பதவியில் இருந்து விலகுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவி விலகும் முடிவை கோட்டாபய திரும்ப பெறுவதற்கான சமிஞ்ஞை: வெளியாகியுள்ள தகவல் | President Signal To Withdraw His Decision

நாட்டில் மிக மோசமான நிலைமை ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், ஜனாதிபதி பதவி விலகுவதற்கு நல்ல நேரத்தை பார்ப்பதற்கான தேவையில்லை. அரச நிர்வாகம் தொடர்பாக அவருக்கு இருந்த தார்மீக அதிகாரம் ஏற்கனவே அவரிடம் இருந்து பிடிங்கி எறிப்பட்டு விட்டது.

பதவி விலகுவது தொடர்பில் கோட்டாபய சபாநாயகர் மற்றும் பிரதமரிடம் இணக்கத்தை தெரிவித்துள்ளாரே அன்றி இன்னும் பதவி விலகவில்லை. இதனால், அவரது பதவி விலகல் தொடர்பான முடிவு  நாளைய தினம் கூட திரும்ப பெறப்படலாம் என்பதில் சந்தேகமில்லை என அந்த சிங்கள இணையத்தளம் கூறியுள்ளது. 

மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US