ஒரு வேளை உணவை கூட உண்ணக்கூடிய நிலையில் நாங்கள் இல்லை - முல்லைத்தீவு மக்கள் (Photo)
முல்லைத்தீவு - துணுக்காய் பிரதேசத்துக்குட்பட்ட தேராங்கண்டல் கிராமத்தில் தொழில் வாய்ப்பின்றியும், வருமானம் இன்றியும் பெருமளவான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அன்றாட உணவிற்கே பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்துள்ளனர்.
விலையேற்றத்தால் அல்லாடும் மக்கள்
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, பொருட்களின் விலையேற்றம் என்பன தொழில் வாய்ப்பற்ற குடும்பங்களையும், பெண்கள் தலைமைத்துவ குடும்பங்களையும் பெரிதும் பாதித்துள்ளன.
குறிப்பாக அரிசி, சீனி, கோதுமை மா உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும் குறைக்கப்பட்ட விலைகளில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியாது இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், இப்பகுதி மக்கள் அன்றாடம் ஒரு நேர உணவை கூட உண்ணக்கூடிய நிலையில் நாங்கள் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
வாழ்வாதாரத்துக்காக எந்த ஒரு பயிர் செய்கைகளை கூட மேற்கொள்ள முடியாத நிலையில் எரிபொருட்களின் விலையேற்றமும், பெரிதும் எங்களைப் பாதித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.






16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 22 மணி நேரம் முன்

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
