இந்திய - இலங்கை நில இணைப்புக்கு மாற்று வழி: பரிசீலிக்கப்படும் புதிய திட்டம்
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே நில இணைப்பை ஏற்படுத்துவதில், பழங்கால ராமர் சேது அல்லது ஆதாம் பாலத்திற்கு பதிலாக ஒரு மாற்று வழி குறித்து ஆராயப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விடயம் இந்து மத உணர்வுகளைத் தடுக்கும் என்றும் கருதப்படுகிறது.
அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயத்தின் போது, இலங்கை துறைமுகங்களுக்கான அணுகலை மேம்படுத்தும் நோக்கில் உத்தேச திட்டம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
புதிய பாதை தொடர்பில் இலங்கை தரப்பு பரிசீலனை
நீண்ட காலத்திற்கு முன்னர், இதே யோசனை முன்வைக்கப்பட்டபோது, பண்டைய ஆடம்ஸ்
என்ற ஆதாமின்; பாலம் தொடர்பில் கரிசனைகள் எழுந்துள்ளன.
ஆதாமின் பாலம் என்றும் அழைக்கப்படும் ராமர் சேது, தமிழ்நாட்டின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள பாம்பன் தீவு மற்றும் இலங்கையின் வடமேற்கு கடற்கரையில் உள்ள மன்னார் தீவு ஆகியவற்றுக்கு இடையே உள்ள சுண்ணாம்புக் கற்களின் பாதையாகும்.
இராவணனால் சிறைபிடிக்கப்பட்ட தனது மனைவி சீதையை மீட்பதற்காக இலங்கையை நோக்கிப் படையெடுத்த ராமரின் சார்பாக ஹனுமான் தலைமையிலான வானரப் படையால் இது கட்டப்பட்டது என்பது புராண நம்பிக்கையாகும்.
இந்நிலையில் இந்தியாவில், சேதுசமுத்திரம் கப்பல் வழித்தட திட்டம் சில அரசியல் கட்சிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் சில இந்து மத குழுக்களின் எதிர்ப்பையும் சந்தித்து வருகிறது. அதை எதிர்த்து இந்திய உயர்நீதிமன்றிலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான முன்மொழியப்பட்ட நில இணைப்பு கட்டுமானத்தில் ஒரு புதிய பாதை பரிசீலிக்கப்படும் இலங்கை தரப்பு தெரிவித்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

மகாநதியை தொடர்ந்து விஜய் டிவியில் மாற்றப்படும் 2 சீரியல்களின் நேரம்.. எந்தெந்த தொடர் தெரியுமா? Cineulagam

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan
