வத்தளை குடும்பஸ்தர் நுவரெலியாவில் வெட்டிக்கொலை: வெள்ளவத்தை பெண் படுகாயம்
நுவரெலியாவில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீப்பிலிமான பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் இன்று(09.09.2023) வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணை
குறித்த சம்பவத்தில் வத்தளைப் பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய எஸ்.சுந்தரலிங்கம் என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை கொழும்பு - வெள்ளவத்தை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் காணித் தகராறு காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது எனத் தெரிவித்த பொலிஸார், சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளார் எனவும், அவரைக் கைது செய்வதற்கான விசாரணை ஆரம்பமாகியுள்ளது எனவும் குறிப்பிட்டனர்.
மேலும் நுவரெலியா மாவட்ட நீதிவான் சம்பவ இடத்துக்கு வருகை தந்து, விசாரணைகளை மேற்கொண்ட பின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டள்ளதாக நுவரெலியா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri
