நீர் விநியோக தடை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு
நீர் விநியோகத்தில் தடைகளை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் அனோஜா களுஆராச்சி தெரிவித்துள்ளார்.
நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக தினசரி தண்ணீர் தேவை அதிகரித்து வருவதே இதற்கு காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சில பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்தின் கீழ் நீர் வழங்கவோ அல்லது நீர் விநியோகத்தை மட்டுப்படுத்தவோ வேண்டியுள்ளது.
தொலைபேசி இலக்கம் அறிமுகம்
இது தொடர்பாக முறைப்பாடுகளைத் தெரிவிக்க 1939 என்ற தொலைபேசி இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, அம்பத்தலே மற்றும் பியகம நீர் நீரேற்று நிலையங்களுக்குள் உப்பு உட்புகுவதைத் தடுப்பதற்காக அமைக்கப்பட்ட தற்காலிக உப்புத் தடுப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
