நாட்டில் பல பகுதிகளில் இன்று - நாளை நீர் வெட்டு: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு
நாட்டில் சில பகுதிகளில் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர பராமரிப்புப் பணி காரணமாக, இன்று(16.06.2026) 19 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் முழுமையாக துண்டிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இதற்கமைய, இன்று(16) காலை 8.00 மணி முதல் அதாவது நாளை(17) அதிகாலை 3.00 மணி வரை பின்வரும் பகுதிகளில் நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 மணிநேர நீர் வெட்டு
மேலும், மினுவாங்கொடை வலயம்: மினுவாங்கொடை, அஸ்கிரிய, உடுகம்பொல, ஓபாத மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள். கம்பஹா வலயம்: கம்பஹா மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகள், கம்பஹா பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகள், வெலிவேரிய, பெலும்மஹர, ரதுபஸ்வல மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள்.

மஹர வலயம்: மஹர பிரதேச சபைக்குட்பட்ட மாஹரகம, சிவுரலுமுல்ல, கிரிகித்த, கினிகம, எட்டிகெஹெல்கல்ல மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள்.
அத்தனகல்ல வலயம்: ரன்பொகுணகம வீட்டுத் திட்டம், ஊராபொல, அத்தனகல்ல, படலீய, வதுபிட்டிவல மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள்.
நிட்டம்புவ வலயம்: நிட்டம்புவ, வேயங்கொடை, கலகெடிஹேன, திஹாரிய, நைவல மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள்.
எனவே, குறிப்பிட்ட காலப்பகுதிக்குத் தேவையான நீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக் கொள்ளுமாறும், நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் சபை, பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
இது தொடர்பான மேலதிக விபரங்களை 1939 என்ற அவசர அழைப்பு இலக்கத்தின் ஊடாகத் தொடர்புகொண்டு அறிந்து கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளது.
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri