கொழும்பின் பல பகுதிகளில் 24 மணித்தியால நீர் விநியோகத் தடை!
நாட்டின் சில பகுதிகளில் நாளையதினம்(24.6.2026) 24 மணித்தியால நீர் விநியோகத் தடை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
லபுகம மற்றும் கலடுவாவவிலிருந்து மகரகம வரை நீர் விநியோகம் செய்யும் பிரதான விநியோகக் குழாயில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக நீர் விநியோகத் தடை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
நீர் விநியோகத் தடை
அதன்படி, நாளை மாலை 6.00 மணி முதல் 2026 ஜூன் 25 வியாழக்கிழமை மாலை 6.00 மணி வரை கலகெதர, ஹோமாகம, கொட்டாவ,பன்னிபிட்டிய, பெலன்வத்த, மஹரகம ஆகிய பகுதிகளுக்கு இந்த நீர் விநியோகத் தடை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நீர் விநியோகத் தடையினால் நுகர்வோருக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு சபை தனது வருத்தத்தைத் தெரிவிப்பதுடன், நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது.