இலங்கையில் வீடுகள் மற்றும் பணியிடங்களில் உள்ளவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
இலங்கையில் வீடுகள் மற்றும் பணியிடங்களில் உள்ளவர்களை, நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
இது தொடர்பில் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதி பொது முகாமையாளர் அனோஜா களுஆராச்சி மேலும் தெரிவிக்கையில்,
சுத்திகரிப்புக்காக நீர் பெறும் ஆதாரங்களில் நீர் வற்றிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. வறட்சியான காலநிலையினால் 20 நீர் விநியோக அமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன.
நீர் விநியோகம் குறையக்கூடிய சூழ்நிலை
அத்துடன் 41 நீர் வழங்கல் கட்டமைப்புகளின் நீர் விநியோகம் குறையக்கூடிய சூழ்நிலை நிலவுகிறது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் கடல் மட்டத்திலிருந்து 409 மீற்றராக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் கடந்த 8ஆம் திகதி 411 மீற்றர் மட்டத்தில் நீர் காணப்பட்ட போதிலும், நீர்மின் உற்பத்தி காரணமாக இரண்டு நாட்களில் நீரின் அளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam
